வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த ஆண்டு 'நன்றி தெரிவிக்கும் நாளை' (Thanks giving) முன்னிட்டு 2 வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அரசியல், சமூக, கலாசார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வருடந்தோறும் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,இவ்வாறு 2 வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் ஜனாதிபதியினால், நன்றி தெரிவிக்கும் நாட்களுக்கு முன்பு 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது வழக்கமான பாரம்பரிய முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண வீட்டில் அரசியல்.. 58 நிமிடங்கள் முன்
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri