கடுமையாகும் போட்டிநிலை: கவலை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ் தரப்பு
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(Kamala Harris )மற்றும் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் டிம் வோல்ஸ்(Tim Walz) கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்துக்கொண்ட அவர் இரு வேட்பாளர்களுக்குமான வேறுபாட்டை வெளிப்படத்தும்போதே இதனை கூறியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
சிறந்த வேட்பாளர்
“நாடு உண்மையில் பிளவுபட்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ளும் மக்கள் சிறந்த வேட்பாளரை தெரிவு செய்வார்கள்.
எமது தரப்பு எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என நினைக்க வைக்கும் ஒரு வேலையை செய்துள்ளது.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மக்களை அவமதிக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார்.
இவ்வாறான சூழ்நிலையிலும் இரு தரப்புக்குமான போட்டி சமமாக காணப்படுகிறது. அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |