வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் ரஷ்யா: அமெரிக்க உளவுத்துறை - செய்திகளின் தொகுப்பு
வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது என அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தொடுத்துள்ள ரஷ்யா ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றாக்குறையால் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி ரஷ்யா பயன்படுத்தியது. ஆனால் இந்த டிரோன்களில் தொழில்நுட்ப கோளாறுகளை ரஷ்யா எதிர்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.
வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் ரஷ்யா
இந்நிலையில் உக்ரைன் போருக்காக வட கொரியாவிடம் இருந்து ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது என அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவின் பக்கம் ரஷ்யா திரும்பி இருப்பது உண்மைதான். உக்ரைன் போரினால் ஆயுதங்கள், தளவாடங்கள் தட்டுப்பாட்டினால் ரஷ்யா தத்தளிக்கிறது" என தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
