இலங்கையில் சீனாவுக்கு முட்டுக்கட்டையிடும் அமெரிக்காவின் திட்டங்கள்!
இலங்கைத் துறைமுகங்களுக்கு வரும் இராணுவக் கப்பல்கள் கட்டுப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக, சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் தயாரித்து வருகிறது.
ஆர்வம் காட்டும் இராஜதந்திர தரப்புக்கள்
சீனாவின் யுவாங் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துச்சென்றமை தொடர்பான சர்ச்சையின் நேரடி விளைவு இதுவாகும்.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கனிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனுக்கான சப்ரியின் விஜயத்தின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்படாவிட்டாலும், இந்த விடயத்தில் அமெரிக்கா, கணிசமான ஆர்வததைக் காட்டியதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது குறித்தும் இந்த சந்திப்பின்போது, அமைச்சர் சப்ரி, அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளார்.
