ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு முன் அதனை அமெரிக்கா சொந்தமாக்க வேண்டும் - டிரம்ப்
ரஷ்யாவும், சீனாவும் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு முன், அதனை அமெரிக்கா "சொந்தமாக்க" வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடுகள் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும், அதேநேரம் அமெரிக்கா கிரீன்லாந்தை பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் அதனை "எளிதான வழியில்" அல்லது "கடினமான வழியில்" செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை கைப்பற்றல்
நேட்டோ உறுப்பினரான டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து, தமது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் கூறியிருந்தது. எனினும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியன இதனை எதிர்க்கின்றன.
கிரீன்லாந்து பிரதேசம் விற்பனைக்கு இல்லை என்று கூறுகின்றன. இராணுவ நடவடிக்கை அட்லாண்டிக் எல்லைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு கூட்டணியின் முடிவைக் குறிக்கும் என்று டென்மார்க் கூறியுள்ளது.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசமாக இருந்தாலும், வட அமெரிக்காவுக்கும் ஆர்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்தின் இருப்பிடம், ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்றதாக அமைகிறது.

இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா
இந்த நிலையில், கிரீன்லாந்தின் வடமேற்கு முனையில் உள்ள பிட்டுஃபிக் தளத்தில் அமெரிக்கா ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
அத்துடன், டென்மார்க்குடனான தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ், அமெரிக்கா விரும்பும் அளவுக்கு அதிகமான துருப்புக்களை கிரீன்லாந்திற்கு கொண்டு வர அதிகாரம் உள்ளது.
"நான் சீன மக்களை நேசிக்கிறேன். நான் ரஷ்யா மக்களை நேசிக்கிறேன், ஆனால் அவர்கள் கிரீன்லாந்தில் ஒரு அண்டை நாடாக இருக்க விரும்பவில்லை. இதனை நேட்டோ புரிந்து கொள்ள வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |