பிரித்தானியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது அமெரிக்கா! - புதிய அறிவிப்புகள் வெளியாகின
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் நவம்பர் முதல் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சோதனை மற்றும் தொடர்பு தடமறிதலுக்கு பயணிகள் உட்படுத்தப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்கா கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகை கோவிட் -19 ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் இன்று புதிய விதிகளை அறிவித்தார்.
“இது நாடு சார்ந்த அணுகுமுறை என்பதை விட தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டது, எனவே இது ஒரு வலுவான அமைப்பு." "மிக முக்கியமாக, அமெரிக்காவிற்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் முழுமையாக தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும்," என்று அவர் அறிவித்துள்ளார்.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர் மற்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
புதிய விதிகளின்படி, வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி சான்றை நிரூபிக்க வேண்டும், எதிர்மறை கோவிட் -19 சோதனை முடிவைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தொடர்புத் தகவலை வழங்க வேண்டும்.
எவ்வாறாயினும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தடுப்பூசி பெற்றுள்கொள்ள தகுதியற்ற குழந்தைகள் உட்பட, புதிய கொள்கையில் சில விலக்குகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு மட்டுமே புதிய விதிகள் பொருந்துமா என்பது தெரியவில்லை, இதை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் நிர்ணயிக்கும் என்று ஜியண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்கள் நாட்டிற்குள் நுழைய முடியும், எனினும் அவர்கள் அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு முன்னரும், நாடு திரும்பிய பின்னரும் பிசிஆர் சோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri