இலங்கையின் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து விசேட சந்திப்புக்களை நடத்திய அமெரிக்க உயரதிகாரி
இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியமான பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இலங்கையில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
பெருங்கடல், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான பணியகத்தின் பதில் உதவிச் செயலாளரான ஜெனிபர் ஜே.ஆர். லிட்டில்ஜோன் (Jennifer R. Littlejohn) கொழும்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கடல் உயிரியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்காவின் உறுதிப்பாடு
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பெருங்கடல்களைப் பாதுகாப்பதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், பல்லுயிர் இழப்பைத் தடுப்பதிலும் உலகளாவிய பங்காளித்துவத்திற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாகக் கூறினார்.
இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியமான பாதுகாப்புக் கொள்கைகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன என்று ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
