ஈரானின் இலக்குகள் மாறினால் விளைவுகள் மோசமடையும்! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள எந்த அமெரிக்க இலக்குகளையும் ஈரான் தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோதலை எளிதாக முடிவுக்குக் கொண்டுவருவது ஈரானின் கைகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை ட்ரம்ப் பாராட்டியுள்ள நிலையில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்க ஆயுதப் படைகள்
“ஈரான் சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.
குறிப்பாக அமெரிக்க இலக்குகளைச் சேர்த்து அதன் பழிவாங்கலை ஈரான் விரிவுபடுத்த கூடாது.
ஈரானால் நாம் எந்த வகையிலும், வடிவத்திலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது இறங்கும்.
இருப்பினும், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஏற்படும். போரை முடிவுக்கு கொண்டுவர குறிப்பிடப்படாத பல சந்திப்புகள் நடைபெற்று வருகிறது.
அணுசக்தி திட்டம்
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என தெரிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக என்று கூறிவருகிறது.
ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றன.
இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகும்போது பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் கூறியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டன.
தற்போது இஸ்ரேலிய வானம் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலிய இடைமறிப்பு போர் விமானங்கள் சூழப்பட்டுள்ளது. கடந்த இரண்டு இரவுகளில் ஈரானின் 270 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் சுமார் 22 இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு கேடயத்தை உடைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பிராந்திய மோதல் மற்றும் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
