ஒரே நாளில் 12 போர் விமானங்களை ஈரானிடம் பறிகொடுத்த அமெரிக்கா!
அமெரிக்காவின் ஈரானுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் F-15E மற்றும் ஒரு A-10 வார்தாக் விமானங்களை ஈரானியப் படைகள் தாக்கியுள்ளன.
முன்னதாக போரின் ஆரம்பத்தில் குவைத் வான் பாதுகாப்புப் படையினரின் தவறான தாக்குதலால் 3 அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.
கடந்த 28 அன்று 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) மூலம் ஆரம்பித்த இந்தப் போர், தற்போது உலகையே அச்சுறுத்தும் ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இதனை ஏப்ரல் 7ஆம் திகதிக்குள் (இன்று நள்ளிரவு) மீண்டும் திறக்க வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதால், போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்ற அச்சம் சர்வதேசத்தில் எழுந்துள்ளது.
இவ்விடயங்கள் குறித்த விரிவான ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,