மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணையும் அமெரிக்கா! பைடன் நிர்வாகம் நடவடிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் (UNHRC) மீண்டும் இணைவதற்கு ஜோ பைடனின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, பைடன் நிர்வாகம் அமெரிக்காவை ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கைக்கு மறுபரிசீலனை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பல சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதற்கான தனது முடிவுகளுக்கு பங்களித்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப், 2018 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகினார்.
இஸ்ரேலுக்கு எதிராக பக்க சார்பாக செயற்படுவதாகக் குற்றம்சாட்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து விலகுவதற்கு அமெரிக்கா முடிவெடுத்திருந்தது.
இந்நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் (UNHRC)மீண்டும் இணைவதற்கு ஜோ பைடனின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.