ஈரானுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள முக்கிய அறிக்கை.. போர்பதற்றத்தில் திடீர் திருப்பம்
அமெரிக்கா, ஈரானுக்கு 15 அம்சங்களைக் கொண்ட ஒரு திட்டத்தை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் Channel 12 ஆகியவை இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
வெளியான தகவல்கள்
இந்தத் திட்டம், பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக போரில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் முன்வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஆவணம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும், தகவல்களை சரிபார்க்கும் பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Channel 12 வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக Strait of Hormuz திறந்தும், சுதந்திர கடல் வழித்தடமாகவும் இருக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில், இந்தத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொண்டால், அதன் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படலாம் என்பதும் கூறப்பட்டுள்ளது.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam