வரலாற்று உச்சத்தில் தங்கம்,வெள்ளி விலை! நாளை ஏற்படவுள்ள மாற்றம்
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சத்தில் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் போர் பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போர் பதற்றம் முடிவு
இந்த போர் பதற்றம் முடிவுக்கு வரும் வரை நிலைமை மாறாது எனவும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளியில் தங்களுடைய பணத்தை குவிக்க தொடங்குவார்கள் எனவும் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்திருக்கின்றன.
இதன் காரணமாக மத்திய கிழக்கு போர் தங்கம், வெள்ளி விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்
நேற்றைய தினம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியதாக செய்தி வெளியான உடனேயே உலக சந்தையில் தங்கம் விலை உச்சமடைய தொடங்கியது.

ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5278 டொலராகவும் வெள்ளியின் விலை 93 டொலராகவும் உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது.
எனவே நாளை சந்தையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் எனவும், நிச்சயமாக தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக உயரப்போவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam