இலங்கையின் தேசியக்கொடி வாசல் விரிப்பு தொடர்பில் அமெரிக்காவிடம் கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை
அமேசோன் இணையத்தளத்தில் இலங்கையின் தேசியக்கொடியுடன் கூடிய வாசல் விரிப்பு விற்பனை குறித்து அமெரிக்காவிடம் தமது கவலையை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் தேசியக்கொடியை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தாம் எதிர்ப்பதாக வோசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இது இலங்கை அரசாங்கத்தின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் செயலாகும்.இந்த நிலையில் அமேசோன் தளங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பொருட்களை உடனடியாக அகற்றுமாறு இலங்கைத்தூதரகம், அமெரிக்க வோசிங்டனில் அமைந்துள்ள அமேசோன் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்தது.
அத்துடன் அமெரிக்க வர்த்தகத்துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தொடர்புடைய பிரிவுக்கு நிலைமையை தெரிவிக்கவும், இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் சர்ச்சையை உருவாக்கிய இலங்கை கொடி கதவு விளம்பரம் ஏற்கனவே அமேசானிலிருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.