அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் விமானங்கள் இரத்து..!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, சூரிச் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை நடைபெறும் பர்கன்பிராக் மலைப்பகுதிக்கு மேல் அவசர அவசரமாக "விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலம்" அறிவிக்கப்பட்டது.
விமானங்கள் இரத்து
கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, சுவிட்சர்லாந்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான ‘ஸ்கைகைடு’ தனது ரேடார் அமைப்பில் இணைத்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தத் தடங்கலுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் சூரிச் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 12 விமானங்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய 14 விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. மேலும், 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் கடுமையான தாமதத்தை எதிர்கொண்டன.
தற்போது இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனை முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, விமானச் சேவைகள் வழம்போல் சீராக இயங்கி வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் ஸகைகைடு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.