ட்ரம்பின் பிளான் B! 21 மணிநேரப் பேச்சுவார்த்தையின் முட்டுக்கட்டையாகிய கோரிக்கைகள்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 21 மணிநேரத் தீவிர அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.
இதன்போது, அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கிய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), இது "ஈரானுக்குக் கெட்ட செய்தி" என்றும், தங்களது "இறுதி மற்றும் சிறந்த சலுகையை" முன்வைத்த பிறகு அமெரிக்க குழு வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.
21 மணிநேரத் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதன் விவரங்களை பகிரங்கமாக விவாதிக்க வான்ஸ் மறுத்துவிட்டார்.
இருப்பினும், அணு ஆயுதங்கள் தொடர்பான விவகாரமே முக்கியத் தடையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் நியாயமற்ற கோரிக்கைகள்..
"ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்பதற்கும், குறுகிய காலத்தில் அணு ஆயுதத்தை அடைவதற்கு உதவும் கருவிகளை நாட மாட்டோம் என்பதற்கும் உறுதியான வாக்குறுதியை வழங்க வேண்டும்.

இதுவே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய குறிக்கோள். இதைத்தான் பேச்சுவார்த்தை மூலம் அடைய முயன்றோம்." என வான்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஈரானின் நிலைப்பாடு மற்றும் 'நியாயமற்ற கோரிக்கைகள்' தாம் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கிடையில், ஈரானின் அரசு ஊடகமான IRIB, பேச்சுவார்த்தை தோல்விக்கு அமெரிக்காவின் "நியாயமற்ற கோரிக்கைகளே" காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
"ஈரான் மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக 21 மணிநேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஈரான் தரப்பில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் முன்னேற்றத்தைத் தடுத்துவிட்டன." என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
ட்ரம்பின் Plan B
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான விவகாரங்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது.

அதேசமயம், ஈரான் மீது கடந்த ஆண்டு மற்றும் பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானின் பல முக்கிய இடங்கள் ஏற்கனவே சேதமடைந்துள்ளன.
இவ்வாறிருக்கையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கப்பட்டதற்கு, ட்ரம்ப் "மாற்றுத் திட்டம் (Plan B) தேவையில்லை" என்று பதிலளித்துள்ளார்.
ஈரானின் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் ஏவுகணைத் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri