அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையிலேயே உள்ளது! ட்ரம்ப் பதிவு
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே மீண்டும் நேரடி மோதல் வெடித்துள்ள நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்குப் பதிலடியாக ஈரான் படைகளுக்குப் பலத்த சேதத்தை அமெரிக்கா ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்காவே முதலில் தாக்குதல் நடத்தி போர் நிறுத்தத்தை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதுடன், கியூஷெம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இந்த மோதலால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து ஒரு பெரல் 100 டொலரைத் தாண்டியுள்ளது.

மேலும் அமெரிக்காவில் பெட்ரோல் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இத்தகைய பதற்றமான சூழலிலும் ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவசரமாக மூடப்பட்ட பாடசாலைகள்! கண்டுபிடிக்கப்பட்ட காரணம் - நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam