அமெரிக்கா தீவிரப்படுத்தும் பொருளாதாரத் தடை: ஈரானுக்கு புதிய நெருக்கடி
வொஷிங்டன் ஈரானைக் கட்டுப்படுத்த "ஒபரேஷன் எகோனமிக் அவுட்காஸ்ட்" என்ற தீவிர பொருளாதாரத் தடை பிரசாரத்தை முடக்கிவிட்டுள்ளது.
ஈரானுக்கு நிதி உதவி வழங்கி வரும் மற்றொரு வங்கி மீது இந்த வாரம் புதிய தடை விதிக்கப்படும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
ஜோர்தான் தளங்கள் மீதான ஏவுகணை வீச்சு
இந்த நிலையில் அண்மையில் எகிப்தின் 'பாங்க் மிஸ்ர்' வங்கியின் UAE கிளை அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
அதேபோன்று, ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் வங்கிகளை டொலர் அடிப்படையிலான உலகளாவிய நிதி அமைப்பில் இருந்து முற்றிலுமாகத் துண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

எனவே ஜி20 நிதித் தலைவர்கள் கூட்டத்தில் ஈரானுடனான வர்த்தகம் குறித்து சீன பிரதிநிதிகளுடன் பேசவுள்ளதாகவும், தேவைப்பட்டால் சீனா மீதும் தடைகள் விதிக்க அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த தடைகள் முற்றிலும் தோல்வியடையும் என ஈரானின் நிதி அமைச்சர் அலி மதனிசாதே கூறி நிராகரித்துள்ளார்.
இதேவேளை போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், லராக் தீவுத் தாக்குதல் மற்றும் ஜோர்தான் தளங்கள் மீதான ஏவுகணை வீச்சு ஆகியவற்றால் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.