அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணிற்கு கிடைத்த உயர் பதவி! ஜோபைடன் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான நீரா தாண்டனை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.
இந்நியமனம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்ததாவது,
நீரா தாண்டன்
பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு, குடியேற்றம், கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார்.
நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர். மூன்று அதிபர்களுக்கு சேவை செய்துள்ளார்.
பராமரிப்பு சட்டத்தின் முக்கிய நபராக இருந்தார். அவரது நுண்ணறிவு எனது நிர்வாகத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றாக சேவை செய்யும் என்பதை நான் அறிவேன். நீரா தாண்டனின் புதிய பொறுப்பில் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர் நோக்குகிறேன்‘ என்று தெரிவித்துள்ளார்.
நீரா தாண்டன் தற்போது அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
