திருகோணமலையை மையப்படுத்தி அமெரிக்க - இந்தியா இடையில் முறுகல் நிலை ஏற்படலாம்
இந்து சமுத்திரத்தை எந்த நாடு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ அந்த நாடு இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் எனப் பொருள்படும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா,அமெரிக்கா என ஒரு இலங்கையை மையப்படுத்தி மூன்று நாடுகள் தங்களுடைய காய் நகர்த்தல்களை நகர்த்திக்கொண்டுள்ளன. உங்களுடைய பார்வையில் இலங்கை தீபகற்பம் என்பது இந்த மூன்று நாடுகளிலும் எந்தளவில் முக்கியம் பெறுகிறது என ஊடறுப்பு நிகழ்ச்சியில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக அளவில் 16 ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்த இந்துமா சமுத்திரம் உலகிற்கான வாங்கல் மார்க்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் இலங்கை தீவை மையப்படுத்தியே மேற்கு கிழக்கு வர்த்தக பாதை அமைந்திருப்பதனால் அந்த வர்த்தக பாதையினுடைய கேந்திர மையத்தில் இலங்கை இருக்கிறது.
ஆகவே மேற்கு கிழக்கு வர்த்தகம் என்பது இலங்கையைச் சுற்றித்தான் செல்கிறது.
அந்தவகையில் இந்து சமுத்திரத்தை எந்த நாடு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ அந்த நாடு இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் எனப் பொருள்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri