இலங்கை வரும் அமெரிக்க உயர் அதிகாரி:மனித உரிமைகள் பற்றியும் பேச்சு
மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தமாக பிரதானமாக கவனம் செலுத்தப்படும் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உதவி ராஜாங்க செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்கிறார். டொனால்ட் லு, நேற்று தொலைபேசியில் செய்தியாளர்கள் சிலருடன் பேசியுடன் அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகிய தரப்புடன் கடந்த நவம்பர் மாதம் வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றிலும் டொனால்ட் லு கலந்துக்கொண்டார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
