அனுமதி இன்றி இலங்கைக்குள் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் பிரவேசம்
அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்குள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி சுற்றுலா விசா ஊடாக பிரவேசித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் USAID என்ற அரச சார்பற்ற நிறுவனம் இவர்களை இலங்கைக்கு அழைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்குள் இவ்வாறு பிரவேசித்த அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி Mark Birnboum என்பவரே இவ்வாறு நாட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
