அமெரிக்காவின் H-1B-H-4 விசாக்களுக்கு விண்ணப்பித்தோருக்கான முக்கிய தகவல்
அமெரிக்காவின் எச்-1பி (H-1B) மற்றும் எச்-4 (H-4) விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துத் தரப்பினரின் இணையதள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நடைமுறையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உலகளவில் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறை டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், விண்ணப்பதாரர்களின் தேசியம் எதுவாக இருந்தாலும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புத் திட்டம்
விசா பரிசீலனை செயல்முறையின் ஒரு அங்கமாக, விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள தகவல்கள் இதன்மூலம் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

சமூக ஊடக நடவடிக்கைகள், பொதுவெளியில் பதிவிடப்பட்ட கருத்துக்கள், பகிரப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் ஏனைய இணைய அடையாளங்கள் இதில் ஆய்வு செய்யப்படும். விண்ணப்பம் செய்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், தகுதியை மதிப்பிடவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது மோசடிகளை கண்டறியவும் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எச்-1பி வேலைவாய்ப்புத் திட்டத்தில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைக் குறைத்து, அதேநேரம் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தேவையான உயர் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து பணியமர்த்த இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்-1பி (H-1B) எச்-4 (H-4) விசாக்கள்
எச்-1பி விசா என்பது தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற சிறப்புத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு நிபுணர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வேலைவாய்ப்பு விசாவாகும்.

எச்-4 விசா என்பது அவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் 21 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக விசா பரிசீலனைக்கான காலம் அதிகரிக்கக்கூடும் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்னதாகவே விண்ணப்பிக்குமாறும், சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளை (Privacy Settings) 'Public' என்ற நிலைக்கு மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிசூடு! சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதலின் பின்னணி