கடலடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க களஞ்சியம்! சீன வரலாற்றில் முக்கிய மைல்கல்
சீனாவின் கிழக்குக் கரையருகே, ஆசியாவின் மிகப்பெரிய கடலடித் தங்க களஞ்சியங்களில் ஒன்றை கண்டறிந்துள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனை South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.
மொத்த தங்க இருப்பு
புதிதாக கண்டறியப்பட்ட இந்த தங்க களஞ்சியம், சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள ஜியாவோதொங் தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது.

சீன வரலாற்றில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கடலடித் தங்க களஞ்சியம் இதுவாகும். இதன் மொத்த தங்க இருப்பு சுமார் 39 லட்சம் கிலோ என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த களஞ்சியத்தின் சரியான அளவு இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில், இது ஆசியாவின் மிகப்பெரிய கடலடித் தங்க களஞ்சியமாகக் கருதப்படுகிறது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிசூடு! சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதலின் பின்னணி
மிகப்பெரிய தங்க படிமம்
இந்த கண்டுபிடிப்பின் பின்னர், ஷாண்டோங் மாகாணத்தின் மொத்த தங்க இருப்பு 3,900 தொன் அளவைக் கடந்துள்ளதாகவும், இது சீனாவின் அறியப்பட்ட தங்க இருப்பின் சுமார் 26 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஷாண்டோங் மாகாணம் சீனாவின் முக்கிய தங்க மையமாக மட்டுமல்லாமல், ஆசியாவின் பிரதான தங்க மையங்களில் ஒன்றாகவும் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, கனிம வள தேடலில் சீனா தனது முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டிலிருந்து, சுமார் 450 பில்லியன் யுவான் தொகை புவியியல் ஆய்வு மற்றும் கனிம தேடல் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம், இயற்கை வளங்களை அதிகரித்து, இறக்குமதிகளின் மீது இருக்கும் சார்பை குறைப்பதாகும். இந்த கடலடித் தங்க கண்டுபிடிப்பு, சமீப காலங்களில் இடம்பெற்ற பல முக்கிய கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
முக்கிய மைல்கல்
இதற்கு முன், சீனாவின் வடகிழக்கு பகுதியில் 1,400 தொன் நிலத்தடித் தங்க களஞ்சியம் கண்டறியப்பட்டது. இது 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தனித்த தங்க களஞ்சியமாகும்.
இந்நிலையில், கடலடித் தங்க களஞ்சியங்களை சுரங்கமாக்குவதின் பொருளாதார சாத்தியங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், உலகளாவிய தங்க தேவை மற்றும் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்த கண்டுபிடிப்பு சீனாவின் பொருளாதார திறன் மற்றும் மூலதன வள பாதுகாப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
சீன அரசு இதனை, நாட்டின் கனிம வளக் கொள்கையில் ஒரு “முக்கிய மைல்கல்” என வர்ணித்துள்ளது.
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam