அமெரிக்க தூதுவர் இலங்கையின் ஊடகவியலாளர்களை தவறாக வழி நடத்தியுள்ளார்!
இலங்கைக்கான அமெரிக்க தூதர், இலங்கையின் ஊடகவியலாளர்களை தவறாக வழி நடத்தியுள்ளதாக, கொழும்பு போர்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட்" குற்றம் சுமத்தியுள்ளது.
அண்மையில் இலங்கையின் ஊடகவியலாளர்கள் குழுவிடம் உரையாற்றிய, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ், போர்ட் சிட்டி அபிவிருத்தியில் பணிபுரியும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவின் தடைகள் பட்டியலில் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
எனவே அந்த நிறுவனத்துடன் வணிகம் செய்வது அறிவுறுத்தக்கூடிய ஒன்றாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு உள்ளான சீன கொம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்சன் கம்பனியின் துணை நிறுவனங்களுடன், தாம்,நேரடி வணிக உறவை கொண்டிருக்கவில்லை என்று கொழும்பு போர்ட் சிட்டி வலியுறுத்தியுள்ளது.
எனவே அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸின் தவறான கருத்துகளை தெளிவுபடுத்துவதும், தமது அமைப்பு பற்றி ஒரு பக்கச்சார்பற்ற புரிதலை வழங்குவதுமே தமது நோக்கம் என்று கொழும்பு போர்ட் சிட்டி தெரிவித்துள்ளது.





தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan
