திருகோணமலைக்குள் அமெரிக்கா நுழைவால் உசாரடைந்த இந்தியா(Video)
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் முதன்மையான இலக்கு சீபா ஒப்பந்தம். 99 எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கு தேவையான என்ற கேள்வி எழுகின்றது. 2030ஆம் ஆண்டுக்கிடையில் தற்போது அவர்கள் கொள்வனவு செய்யும் எண்ணெய்யைப் போன்று 50 வீதமான எண்ணெய் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் என சுட்டிக்காட்டப்படுகின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே எண்ணெய்யை சேமித்து வைக்கும் இடம் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றது. அதுவும் தங்களுடைய நாட்டிற்கு அண்மித்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும். திருகோணமலை துறைமுகம் என்பது மிக முக்கிய பகுதி. இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த பாதுகாப்பான இருப்பிடத்தில் வேறு யாராவது கால் வைத்துவிடக் கூடாது என்ற நிலையினால்தான் எண்ணெய் குதங்களின் குத்தகையை அவர்கள் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,



