அமெரிக்கா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் அரச உதவிகளை (taxpayer-funded benefits) நம்பிச் சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியேற்றமற்ற விசா வைத்திருப்பவர்கள் பொது உதவிகளை தவறாகப் பயன்படுத்தினாலோ அல்லது அவற்றின் மீது தங்கியிருந்தாலோ, அவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய மீறல்கள் எதிர்காலத்தில் அவர்கள் விசா பெறுவதற்கான தகைமையையும் இழக்கச் செய்யும் என அமெரிக்க தூதரகம் மேலும் எச்சரித்துள்ளது.
"அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும்போது உங்களது சொந்த செலவுகளை நீங்கள் ஏற்கத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தற்சார்புடன் இருக்க வேண்டும் மற்றும் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri