அமெரிக்க டிரோன் மீது ரஷ்ய போர் விமானம் மோதல்!
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியதால், ஆளில்லா அமெரிக்க விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷ்யாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க இராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷ்ய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கருங்கடலில் அமெரிக்க விமானங்களை ரஷ்ய இடைமறிப்பது அசாதாரணமானது அல்ல, ஆனால் அது விபத்தில் சிக்கியது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
2014 இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்ததில் இருந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, அமெரிக்காவும் இங்கிலாந்தும் சர்வதேச வான்வெளியில் எப்போதும் இயங்கினாலும், உளவு மற்றும் கண்காணிப்பு விமானங்களை முடுக்கிவிட்டன என தெரிவிக்கப்படுகின்றது.