பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா
அமெரிக்க இராணுவம் முதன்முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தி உள்ளது.
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது..
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கேரி வருகிறது.

சென்னைக்கு அருகில் தரித்துநின்ற பாக்கிஸ்தான் யுத்த விமானங்கள்!! தமிழ்நாட்டையும் விட்டுவைக்காத ஆபத்து
பிலிப்பைன்ஸ் படகுகள்
ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன.
இந்த விவகாரத்தால் அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக அமெரிக்கா
இதில் பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ள நிலையில் அதன் ஒருபகுதியாக இரு நாடுகளும் பிலிப்பைன்சில் கூட்டுப்போர் பயிற்சியை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க இராணுவம் முதன்முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.