உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தரைப்படை வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஊடகத்திற்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் பிரிவின் (82nd Airborne Division) தலைமையகக் குழுக்கள் மற்றும் 1-வது பிரிகேட் காம்பாட் டீம் (1st BCT) ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, எத்தனை வீரர்கள் அல்லது எந்த இடத்திற்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட பென்டகன் மறுத்துள்ளது.
அதிதீவிர படை
வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட இந்த 82ஆவது வான்வழிப் பிரிவு, உலகின் மிகச்சிறந்த போர் அலகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு, உலகின் எந்தப் பகுதிக்கும் வெறும் 18 மணிநேரத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தும் தயார் நிலையில் இருப்பார்கள்.
இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் பாராசூட் அல்லது ஹெலிகாப்டர் மூலம் ஊடுருவி, அந்த இடத்தைக் கைப்பற்றுவதில் இவர்கள் வல்லவர்கள்.
குறிப்பாக, ஈரானுடனான மோதல் வலுக்கும் பட்சத்தில், ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு (Kharg Island) போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
கார்க் தீவு (Kharg Island)
நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட 10ஆவது மலைப் பிரிவின் (10th Mountain Division) கீழ் வரும் 1st BCT படையினர், நீண்ட காலப் போரை எதிர்கொள்ளும் வகையில் முழுமையான ஆயுத தளவாடங்களுடன் அனுப்பப்படுகின்றனர்.

வழக்கமான வான்வழிப் படைகள் குறுகிய காலத் தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இந்த 1st BCT பிரிவினர் "Full Spectrum" எனப்படும் அனைத்து வகையான தீவிர போர்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam