தற்போதைய நிலவரம் இதுவே.. ! ஈரான் நினைத்தால் ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாகவே மூடலாம்
ஹோர்முஸ் நீரிணையில் பயணிப்பது சிக்கலான விடயம் என வணிகக் கடற்படை அதிகாரி காஷ்மீர் அன்ரூ பிறேன் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் தொகுத்து வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய முக்கிய போக்குவரத்துக் பாதை ஹோர்முஸ் நீரிணை ஆகும். இந்த நீரிணையின் பெரும்பகுதி ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதால், யுத்தம் முடிவடையும் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 5 நாட்களாக போரின் முடிவினை எதிர்பார்த்தாலும், தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஈரானிய மக்கள் தினமும் பதற்றத்தில் வாழ வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், ரஷ்யா போர் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, போதிய ஆதாரங்கள் இல்லாமலேயே எண்ணெய் விநியோகம் செய்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்னும் விரிவான தகவல்களை நேர்காணலில் பார்க்கலாம்.
தங்கம் வாங்க மகிழ்ச்சியாக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்! குறைந்த வேகத்தில் சடுதியாக அதிகரிக்கும் பெறுமதி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam