ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் வெளியேறியது!
அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையிலேயே, அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் காபூலை விட்டு வெறியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 14ம் திகதி முதல் காபூலில் இருந்து 6,000 அமெரிக்க குடிமக்கள் உட்பட 79,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியதாக அமெரிக்க மத்திய கட்டளையின் தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
பென்டகனில் நடந்த செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்தது. ஆப்கான் இராணுவத்துக்கு பக்க பலமாக தாலிபான்களுடன் மோதியது அமெரிக்க படைகள். அண்மையில் தலைநகர் காபூலும் தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டார். இப்போது ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் பிடியில் சிக்கிவிட்டது. புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டன். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையிலேயே, அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.