ஹமாஸுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள போலி நிலைப்பாடு!
ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் காட்சிக்காகவே உள்ளன என இஸ்ரேலிய ஆய்வாளரும் முன்னாள் பணயக்கைதி பேச்சுவார்த்தையாளருமான கெர்ஷோன் பாஸ்கின் கூறியுள்ளார்.
மேலும் இது போர்நிறுத்தப் பேச்சுக்களில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷின்வார் அல்லது வேறு எந்த ஹமாஸ் தலைவர்களை அமெரிக்காவுகா விசாரணைக்காக அழைத்துச் செல்வார்கள் என நம்பவில்லை எனவும் கெர்ஷோன் கூறியுள்ளார்.
விளம்பர அறிக்கை
இது உண்மையில் ஒரு பொது விளம்பர அறிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எனினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது தொடர்பிலான மனுக்கள் - ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் தலைவர்கள் இருவருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது ஒரு நிகழ்ச்சி நிறல் விளையாட்டு போலுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |