மிக மோசமான இழப்பை எதிர்கொண்டது ஈரான்.. உத்தியோகபூர்வமாக ஒப்புகொண்ட அதிகாரிகள்
இஸ்ரேலுடனான 12 நாள் போரில் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிகத் தீவிரமானது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குறித்த தாக்குதலினால் ஏற்பட்ட தாக்கத்தை ஈரான் மதிப்பிடத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதம் குறித்த விரிவான மதிப்பீடு ஈரானின் அணுசக்தி அமைப்பின் நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பு
மேலும், "இப்போது, இழப்பீடு கோருவது மற்றும் அவற்றை வழங்குவதன் அவசியம் பற்றிய விவாதம் நாட்டின் இராஜதந்திர நிகழ்ச்சி நிரலில் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சேதங்கள் கடுமையானவை, மேலும் நிபுணர் ஆய்வுகள் மற்றும் அரசியல் முடிவெடுப்பது ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.
நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் அந்த நிலையங்களை அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
