இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் கவனிக்கத் தவறிய இராணுவ வியூகம்
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இராணுவ தாக்குதல்களுடன் இணைந்து, ஈரானின் தலைமை மற்றும் மக்களின் மன உறுதியை சிதைப்பதற்கும், சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கும் மேற்கொண்ட உக்திகள் முக்கியமானதாக இருந்தது.
குறிப்பாக மொசாட்டின் மிரட்டல்கள், இஸ்ரேலின் துல்லிய தாக்குதல்கள், அமெரிக்காவின் இராணுவ மற்றும் ஊடக ஆதரவு ஆகியவை இந்த உளவியல் போரின் முக்கிய கூறுகளாக இருந்தன.
இஸ்ரேல் தனது தாக்குதல்களை "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் நடத்தியது, இது ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முடக்குவதை மையமாகக் கொண்டிருந்தது.இந்த தாக்குதல்கள், ஈரானின் முக்கிய அணு உலை மையங்களான நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் மீது மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம், இஸ்ரேல் தனது இராணுவ மேம்பாட்டை வெளிப்படுத்தி, ஈரானிய மக்களிடையே பயத்தை உருவாக்க முயன்றது. குறிப்பாக பாரசீக மொழி பேசும் மொசாட் உளவாளிகள், ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் ஆட்சியை கைவிடாவிட்டால் தளபதிகள் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது ஈரானிய தலைமையிடையே பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சித்த உளவியல் உத்தியாக பார்க்கப்படும் நிலையில் இதன் தாக்கங்கள் ஈரானை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
