அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா.. தொடர்ந்து மறுக்கும் ஈரான்
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய நிலையில் அதனை முற்றிலுமாக அளித்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
இருப்பினும், ஈரான் அதனை மறுத்து வருவதுடன் குறித்த அணுசக்தி நிலையங்கள் இன்னமும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே, தனது நாட்டின் அணுசக்தி திட்டம் இன்னும் "அப்படியே" இருப்பதாக விவரித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரத்யேக நேர்காணல் ஒன்றில், கதிப்சாதே, ஈரானின் "நாங்கள் பேசுவது போல் அமைதியான அணுசக்தி திட்டம் அப்படியே உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் "நாங்கள் அதைப் பாதுகாக்கப் போகிறோம்" என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் கருத்து
கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 12 நாள் போர் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

அதனை தொடர்ந்து, அதே மாதத்தில் ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்தில் ஃபோர்டோ அழிக்கப்பட்டதாக திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஆரம்பகால அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு மூன்று அணுசக்தி நிலையங்களும் மோசமாக சேதமடைந்துள்ளதாகக் கூறியது, ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே பின்னடைவு அடைந்திருக்கலாம் என கூறப்பட்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |