ட்ரம்புக்கு கொடூர தண்டனை.. மேற்கத்தேய நாடுகளில் திடீர் பதற்றம்!
ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளான அயதுல்லாக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக கொடூர தண்டனை வழங்க அழைப்பு விடுத்திருப்பதால் மேற்கத்தேய நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின படி, ட்ரம்பை சிலுவையில் அறைய வேண்டும் என ஈரானின் மத அடிப்படைவாதிகள் உலக இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தூண்டும் வாய்ப்பை ஏற்டுத்தும் என சர்வதேச முதன்மை அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொலை செய்ய அழைப்பு
ட்ரம்பினை, தனது செயல்களுக்காக வருத்தப்பட வைக்க வேண்டும் என இஸ்லாமியர்களை வலியுறுத்தி, அயதுல்லாக்கள் ஆயுதம் ஏந்துமாறு அழைப்பு விடுத்தனர்.
அது மாத்திரமின்றி, ட்ரம்பை கடவுளின் எதிரி எனவும் அடையாளப்படுத்தி, ட்ரம்புக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இஸ்லாமிய தண்டனைச் சட்டம் என தெரிவிக்கப்படும் மொஹரேப்பின் அடிப்படையில் எதிராக ஃபத்வா எனப்படும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷரியா எனப்படும் அவர்களின் சட்டம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்படுவதோடு மட்டுமல்லாமல், இறப்பதற்கு முன் சித்திரவதை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது.
ஷரியா சட்டம்
அத்துடன், ஈரானின் மூத்த மதகுருவான நஜ்முதீன் தபாசி, ட்ரம்பை தூக்கிட்டு தண்டனைக்கு உட்படுத்துவோம் என்று சபதம் செய்ததுடன் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொல்ல ஒரு கொலையாளியை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுத்த 12- நாள் போருக்கு பின்னர், ஈரானிய மத குருக்கள் பலர் ட்ரம்ப் மீது தங்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரானின் ஆதரவு அடிப்படைவாதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளன என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம், இஸ்ரேலிய - ஈரானிய மோதலில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கிய அழித்தது. இதனை தொடர்ந்தே ட்ரம்பிற்கு எதிராக ஈரானிய மததலைவர்களின் சீற்றம் அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |