இஸ்ரேலுக்கு 26 பில்லியன் டொலர் உதவி : ஒப்புதல் அளித்த அமெரிக்கா
இஸ்ரேலுக்கான 26 பில்லியன் டொலர் நிதி உதவிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிதியில் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்காக 4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 8 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் நெருங்கிய நண்பன்
இஸ்ரேலை பலப்படுத்துவது அமெரிக்காவை பாதுகாப்பானதாக்கும் என்றும் அமெரிக்காவை போல் இஸ்ரேலுக்கு நெருங்கிய நண்பன் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்ரேலுக்கு நிகரான நண்பன் அமெரிக்காவுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |