இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ள மற்றுமொரு நாடு
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற அமெரிக்கா விண்ணப்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது.
விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது. விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை.”என தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri