ஈஸ்டர் தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா விசாரணை!
அமெரிக்காவின் FBI என்ற Federal Bureau of Investigation மற்றும் அவுஸ்திரேலிய காவல்துறை ஆகியவை தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர்சேகர நாடாளுமன்றில் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றப்புலனாய்வு விசாரணைகள் நிறைவடையவில்லை என்று சட்ட மா அதிபர் டபுலா டி லிவேரா கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் வீரசேகர, சபையில் ஒரு சிறப்பு அறிக்கையையும் வெளியிட்டார்.
இந்த வகையான விசாரணைகள் மேற்கொள்ள காலம் செல்லும் என்று அவர் தெரிவித்தார். "செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு சூத்திரதாரி எனக் கண்டறியப்பட்ட காலித் ஷேக் முகமது இன்னும் தண்டிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க சில ஆண்டுகள் ஆனது.
மறைந்த அமைச்சர் லட்சுமன் கதிர்காமரின் கொலையாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் மூன்று ஆண்டுகள் சென்றன.
இந்த வகையான விசாரணைகளுக்கு நேரம் அதிக காலம் என்பதால் தவறு செய்பவர்கள் தப்பிச் செல்ல இடமளிக்க முடியாது என்று சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri