அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை
இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் எரிக் மேயர், இன்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பு தொடர்பாகத் தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் தூதுவர் எரிக் மேயர், பதிவிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, நாடுகடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான கூட்டு முயற்சிகள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்க நம்பகமான அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்குள் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும், அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முன்னேற்றங்களின் அடிப்படையில் இணைந்து செயற்பட இரு தரப்பினரும் மீண்டும் உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam