பொது பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில்,பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸை சந்தித்துள்ளார்.
இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவதை அமெரிக்கா விரும்புகிறது என்று தூதுவர் சங், டிரான் அலஸிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நிதியைப் பெறுவதில் இலங்கைக்கு அமெரிக்காவின் ஆதரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸாரின் பணிகள்
அத்துடன் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இலங்கை பொலிஸாரின் பணிகள் மற்றும் நாட்டில் நிலவும் பொதுமக்கள் எதிர்ப்புகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி எந்த ஒரு பேரழிவு சம்பவமும் நடைபெறவில்லை என்பதில் தான்
மகிழ்ச்சி அடைவதாக தூதுவர் சுங் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.