தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்துள்ள அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ( Julie Chung), இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை ( R.M.A.L.Rathnayake) சந்தித்துள்ளார்.
இதன்போது தூதர் சங் தேர்தல் நடத்துவது தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஜூலி சங், தமது எக்ஸ் தளத்தில் “இந்த உரையாடல், ஜனநாயக ஆட்சியின் அடிப்படையான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டது.
தேர்தல் செயல்முறை
தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் தாம் வலியுறுத்தியுள்ளதாக” தூதுவர் ஜூலி குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு அமைய தேர்தல்கள் நடத்தப்படும் என தலைவர் ரத்நாயக்க தூதுவர் சங்கிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதில் ஆணையத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |