இலங்கையின் கல்வி கட்டமைப்பில் மாற்றம்! கனடாவில் அமைச்சர் சுசில் அறிவிப்பு
இலங்கை கல்வித் துறையின் அபிவிருத்தி மற்றும் கூட்டுறவுத் தேவைகள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்துடன் (USAID) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கலந்துரையாடியுள்ளார்.
கனடாவின் வான்கூவரில் நடைபெறும் பொதுநலவாய கல்விக்கான பொது கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த போதே கல்வி அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், குறித்த கலந்துரையாடலில், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் (USAID) நிர்வாக பிரதிநிதி அஞ்சலி கவுர்வும் கலந்துகொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி
இதற்கமைய, இலங்கை கல்வியின் கட்டமைப்பில் தரமான மாற்றத்தை மேற்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தலை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கலந்துரையாடலில், இலங்கைக்கு USAID நிறுவனம் வழங்கிய உதவிகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், தற்போதுள்ள பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி பங்காளியான சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் (USAID) இலங்கையின் நிலையான அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவை வழங்குவதால், இந்த கலந்துரையாடல் இலங்கையின் கல்வித் துறைக்கு, குறிப்பாக பாடசாலை மதிய உணவு திட்டம் ஆகியவற்றை வழங்க திறம்பட பங்களித்துள்ளதாக கல்வி அமைச்சர் இதன் பொது சுட்டிக்காட்டியுள்ளர்.
பொதுநலவாய கல்வி மன்ற குழுவில் ஆசிய பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், கல்வி அமைச்சர் தொலைதூரக் கல்வி, தகவல் தொழில்நுட்பப் பாடம் மற்றும் பாடத்திட்ட மேம்பாடு உட்பட இலங்கையின் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களில் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..