இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரமடையும் போர்...! காசாவில் 320 இடங்களில் வான்வழி தாக்குதல்
புதிய இணைப்பு
ஹமாஸ் மற்றும் பலஸ்தீன ஜிகாத் அமைப்புகளின் கட்டமைப்புகளை குறிவைத்து காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
ஹமாஸ் மற்றும் பலஸ்தீன ஜிகாத் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்க பாதைகள், தலைமை இடங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடந்துள்ளது.
மக்கள் புலம்பெயர்வு
இந்நிலையில், காசா நகருக்குள் செல்லும் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்களை இஸ்ரேல் படைகள் பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் தீவிரமடைய கூடும் என்ற நிலையில், இலட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என அமெரிக்கா அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மற்றும் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்க குடிமக்கள் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பயங்கரவாதம், கடத்தல், ஆயுத மோதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை போன்ற காரணங்களால் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை
ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.