இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி! பாகிஸ்தான் அறிவிப்பு
இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு விடுத்துள்ளார்.
இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு கடந்த 23ம் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியிருந்தார்.
பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டன.
இந்நிலையில், இம்ரான் கானின் இலங்கை விஜயம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இலங்கையில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சமீபத்திய கோவிட் - 19 ஊரடங்கால் மேலும் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு, பாகிஸ்தான் கோடிக்கணக்கான நிதியுதவி அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan