பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து நிதியுதவி
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து 175,00 அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்தோடு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் தலையீடுகளை வழங்குவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம், தேசிய அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
இந்த மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வைத்தியர் ராஜேஷ் பாண்டவ் கூறியுள்ளார்.
நிதியுதவி
இலங்கை அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, சர்வதேச மனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், விவசாயம், ஊட்டச்சத்து, கல்வி, நீர், சுகாதாரம், தங்குமிடம் மற்றும் ஆரம்பகால மீட்பு தலையீடுகள் ஆகியவற்றில் பல்துறை ஆதரவைக் கோரியுள்ளது.
இந்தநிலையில், தேசிய மீட்பு நடவடிக்கையை ஆதரிப்பதற்கும், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது" என பாண்டவ் உறுதிப்படுத்தினார்.