தமிழர்களின் உணர்ச்சி பூர்வமான நாளில் ஆக்கிரமிக்கப்படும் மற்றுமொரு இந்து ஆலயம்! (Video)
கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பழமை வாய்ந்த உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயம் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
திராவிட கட்டடக்கலைமரபில் அமையப்பெற்ற இவ்வாலயத்தில் காணப்படும் சதுர ஆவுடை இலிங்கம் பல்லாயிரம் ஆண்டு பழமையானது.
சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாலயம் பற்றிய வரலாற்று தகவல்களை தொல்லியல் (கட்டட இடிபாடுகள், சுடுமண் உருவங்கள், செங்கல் கட்டுமானம்), இலக்கிய குறிப்புக்கள், வாய்மொழி செய்திகள், ஐதீகக்கதைகள் ஊடாகவும் அறியலாம்.
நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது தமிழ் மக்களின் காணிகள், இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களங்களினாலும், வன இலக்காக்களினாலும் கைப்பற்றப்பட்டு வருகின்றது.
குருந்தூர் மலை, வெடுக்கு நாறி மலை, திருகோணமலையின் அரிசி மலை என பல இந்து ஆலயங்களின் வரிசையில் வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த உருத்திரபுரீஸ்வரர் சிவாலயத்தையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவை தொடர்பான முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்,