உருகுவேயின் வன்முறை விளையாட்டில் சிக்கி வெளியேறிய பிரேசில்
நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா தொடரின் 4ஆவது காலிறுதிப் போட்டியில் பிரேசிலை (Brazil) வீழ்த்தி உருகுவே அணி (Uruguay) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் பெனால்டி முறையில் போட்டியின் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கமைய, பெனால்டி முறையில் 4 - 2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றி பெற்றது.
சிவப்பு அட்டை
போட்டியில் உருகுவே வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வெற்றியில் வன்முறை கலந்திருந்தாதாக காற்பந்து ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக போட்டியில் உருகுவே அணி வீரர் நஹிட்டன் நண்டெஸுக்கு (Nahitan Nández) போட்டியின் நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
URUGUAY DOWN TO 10 MEN ?
— Stadium Astro ?? (@stadiumastro) July 7, 2024
After a lengthy VAR check, Nahitan Nández was shown a straight red card for his foul on Rodrygo!#CopaAmerica2024 #URUBRA pic.twitter.com/7nuyC8n5Vb
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே வன்முறைகள் இடம்பெற்றாலும் கூட 39ஆவது நிமிடத்திலேயே நடுவரால் முதல் எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை உயர்த்தப்பட்டது.
எனினும், தொடர்ந்தும் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பெரியளவிலான எச்சரிக்கைகள் வழங்கப்படவில்லை.
பெனால்ட்டி முறையில் வெற்றி
எவ்வாறாயினும், போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பிரேசிலிய வீரர் ரொட்ரிகோவின் காலை உதைத்தமைக்காக உருகுவே வீரர் நஹிட்டன் நண்டெஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
Copa America Report ?:
— Peter not Drury (@PeterNotDrury) July 7, 2024
Uruguay Defeats Brazil on Penalties and Advances to the Copa América Semifinals ??
pic.twitter.com/PJ3w06Aujh
அதனைத் தொடர்ந்து, 10 வீரர்கள் மட்டுமே உருகுவே சார்பாக மைதானத்தில் விளையாடினர்.
எனினும், எந்தவொரு பதற்றத்தையும் வெளிக்காட்டாத அணி போட்டியை சமன் செய்து பெனால்ட்டி முறையில் வெற்றி பெற்றது.
அதேவேளை, அரையிறுதியில் உருகுவே அணி, கொலம்பியா அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |