அமெரிக்க வரி உயர்வுக்கு பலதரப்பு அணுகுமுறையை வலியுறுத்தும் கொழும்பின் சிந்தனைக் குழு
அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க வரியை சமாளிப்பதில் பலதரப்பு அணுகுமுறையை உருவாக்குமாறு இலங்கை அரசாங்கத்தையும், சர்வதேசத்தையும், கொழும்பை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான வெரைட் ரிசர்ச், வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய, ஒருதலைப்பட்ச நடவடிக்கையின் காரணமாக, ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைக்க, விதிவிலக்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த நாடுகள் பல வரிசையில் நிற்கின்றன.
உலகளாவிய வர்த்தக ஒழுங்கு
அதாவது, முடிந்தவரை பல நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து, பொதுவான பதிலை உருவாக்க முயற்சிப்பதாக,வெரைட் ரிசர்ச் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரிக் கட்டண உயர்வு, உலக வர்த்தக அமைப்பு (WTO) மூலம் நிறுவப்பட்ட விதிகள் சார்ந்த உலகளாவிய வர்த்தக ஒழுங்கில், கடுமையான முறிவை உருவாக்குகிறது.
இதில், 166 நாடுகளின் 98 வீத வர்த்தகம் உள்ளடக்கியுள்ளதாக சிந்தனைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
