நுவரெலியா மாவட்டத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸாரின் அவசர எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பார்வைத் தூரம் வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதிகாலை முதல் நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை மற்றும் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளிரும் பல உயர்வான பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது.
வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பாதுகாப்பு விதி
சில இடங்களில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர் வரையிலேயே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
நுவரெலியா – ஹட்டன் மற்றும் ஹட்டன் கொழும்பு ஆகிய பிரதான வீதியில் வாகனங்கள் முன்விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக பயணிப்பதும், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே வாகன சாரதிகள் தமக்கே உரித்தான பக்கத்தில் பனி மூட்டம் காணப்படும் இடங்களில் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு மெதுவாக பயணிக்குமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதியாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி வாகனங்களை செலுத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


